காங்கேசந்துறையிலிருந்து தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி களுத்துறை காலி மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த ரயிலானது ஜுன் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு வடக்கின் காங்கேசந்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ‘மக்கள் தொடர்பாடல்’ என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரத திணைக்களத்தின் அனுசரணையுடனும் ரூபவாகினி வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படவுள்ளது.

உங்களிடமிருந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசப் கொப்பி புத்தகங்கள், தலையணை, மெத்தை, நுளம்பு வலை, சவர்க்காரம், பற்பசை, சுத்தப்படுத்தும் உபகரணங்கள், கட்டில் விரிப்புக்கள், துவாய், பெரியவர்கள் மற்றுமு; சிறுவர்களுக்கான ஆடைகள், பாடசாலை சீருடைகள், புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், செருப்புக்கள் மற்றும் சமயலறை உபகரணங்களை எதிர்பார்க்கின்றோம்.

இந்த ரயிலானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம் மாஹோ, கணேவத்த, குருணாகல், பொல்காவல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம், வெயங்கொட, கணேமுல்ல, கம்பஹா, ராகம, களனி, ஹுணுபிட்டிய, தெமட்டகொட, மருதானை, கொழும்பு கோட்டை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய ரயில் நிலையங்களில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிறுத்தப்படவுள்ளது.

இன்று முதல் 10ஆம் திகதி ரயிலானது ரயில் நிலையத்திற்கு வரும்வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் உங்கள் உதவிப் பொருட்களை வழங்கலாம்.

இந்த புகையிரத்தில் மாத்தறைக்கு பயணித்து மனிதாபிமான உதவிகளை தொண்டரடிப்படையில் மேற்கொள்ள ஆர்வமுள்ளோர் 0771910630 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான தங்குமிடம் உணவு மற்றும் மீள் திரும்புவதற்கான பயண வசதிகள் இலவசமாக ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

Related Posts