திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை கைது செய்தமையை கண்டித்து யாழில் போராட்டம்

ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதகா தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் ,’கடந்த மே மாதம் 21ஆம் திகதி தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு திருமுருகன் காந்தி உட்பட மே 17அமைப்பை சார்ந்தவர்களும் பொது மக்களும் தீர்மானித்திருந்தனர்.

இதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் அதனையும் மீறி நினைவேந்தலை நடாத்தியமையாலேயே திருமுருகன் காந்தி உட்பட தமிழர் விடியல் கட்சியின் தலைவர் செயற்பாட்டாளர்கள் இருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கவணயீர்ப்பு போராட்டத்தில், ஜெனிவா மனிதவுரிமை பேரவையிலே இடம்பெற்றது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கப்பட கூடிய விடயம் என்பதையும், அங்கே தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட ஏமாற்று நாடகத்தின் உண்மையை அம்பலப்படுத்திய அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

அதே சமயம் இதில் ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் தமிழர்களுக்கு எதிரான அவர்களை ஏமாற்றுகின்ற நாடகத்திற்கு ஆதரவழித்து அதனை அரகேற்றிய எவரும் பங்குபற்றக் கூடாது.

மேலும் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தை யாழ்.இந்திய தூதுரகத்திற்கு முன்பு அல்லது யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பு நடாத்துவதற்கு ஆலோசித்துவரும் நிலையில் அது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவித்தார்.

Related Posts