யாழில் இடம்பெற்று வந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல், சன்னா ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இவர்கள் குறித்து இந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) கியூ பிரிவு பொலிஸாரால் இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.