நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க யாழ். மக்கள் முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும், அரிசி, சீனி, பருப்பு, பால்மா, மற்றும் குடிநீர் போத்தல்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றோம்.
உதவிப் பொருட்களை வழங்க விரும்புகின்றவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் மற்றும் ஏனைய இடங்களில் இருக்கும் தமிழ் மக்கள் இன மத பேதமின்றி தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு உணர்வுபூர்வமாக முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார்.