யாழ்.பொதுநூலக எரிப்பின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
யாழ். பொதுநூலக முன்றலில் இன்று (வியாழக்கிழமை ) மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு. “இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாகப் பண்பாட்டுப் படுகொலை” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் உணர்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.