தொடரும் மழை காலநிலை காணரமாக தியவன்னா ஓயவின் நீர்மட்டம் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற நுழைவாயில் பகுதிகளில் மணல் மூட்டைகளை நிரப்பி கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை சற்று குறைவடைந்துள்ளதால் தியவன்னா ஓயவின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இன்றும், நாளையும் மழை எதிர்பார்க்கப்படுவதாகல் முன்னெச்சரிக்கையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றம் 1992 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.