நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அதே சந்தர்ப்பத்தில், அனர்த்தங்களில் மாணவர்கள் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.