க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி, எதிர்வரும் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள், இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.