நீடித்துவரும் சீரற்ற காலநிலை: உயிரிழப்பு எண்ணிக்கை நூறை எட்டியது

நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தினால் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுள் 2 இலட்சம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளதால், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts