சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 011-2136226, 011-2136136 அல்லது 077-3957900 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொண்டு முகம் கொடுத்துள்ள அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழைக் காரணமாக பல நீர்தேக்கங்கள் வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நோட்டன் பிரிஜ், விமலசுரேந்திரா,கெனியோன் போன்ற நீர் தேங்கங்கள் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை களனி கங்கைக்கு இரு புறங்களிலும் வாழும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சற்று அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.