ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட வேளை நீதவான் எம்.கணேசராஜா எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார்.

சந்தேகநபரை முன்னிலைப்படுத்தி விசேட குற்றப்புலனாய்வு துறை நீதிமன்றத்தில் முன் வைத்த அறிக்கையில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரி ஊடாக ஆஜர்படுத்த நீதிமன்ற அனுமதியை கோரியிருந்தது.

அதேவேளை சந்தேகநபரான குலத்துங்க தான் மன்றில் கூற்றொன்றை கூற விரும்புவதாக நீதவானிடம் தெரிவித்தார்.இதனை ஏற்றுக் கொண்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து, நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி வரை ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதாகி ஓன்றரை வருடங்களுக்கு மேலாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts