முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது,
அந்த அமர்வில் அவைத்தலைவரினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டிப்பதுடன் இந்த செயல் தொடர்பில் பொது மக்களிடம் கவலையையும் மன்னிப்பையையும் கோருவதுடன் , அதனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதுடன் , மன்னிப்பையையும் இந்த சபை கோருகின்றது என அவசர பிரேரணையை முன் வைக்கவுள்ளார்.