குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தல்!

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்த 120 இலங்கையர்கள் அங்கிருந்து இன்று (புதன்கிழமை) நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான மூலம் இரண்டு கட்டமாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும், முதற்கட்டமாக இன்று காலை 9.30 மணிக்கு 50 பெண்கள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்கா பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் இலங்கையில் உள்ள முகவர்கள் ஊடாக குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்களாக, மேசன்,தச்சுதொழில் மற்றும் வாகனசாரதியாக தொழில்வாய்பை பெற்று அங்கு சென்றிருந்தனர்.

பின்னர் குறித்த தொழில் வழங்கிய நிறுவனத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியிருந்த நிலையில் இவர்களை குவைத் நாட்டு பொலிசார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts