முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.
இவ்வாறான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாளையதினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பூரண கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அதன்போது அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது கடமையில் இருந்து விலகி நடக்குமாறு அவ்வமைப்பு கோரியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரு வாரங்களாக பல்வேறு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதுவரை சுமார் 21 தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.