பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பெற்றோரும் மாணவர்களும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் பாடசாலை சுற்றாடலை வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கான விசேட அறிவுறுத்தல் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.