முன்னறிவிப்பு இன்றி, பணிப்புறக்கணிப்பிற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயார்!

சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறினால் முன் அறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் முன்வைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்படி பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 30 ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையின் தலைவர் மாற்றம் இடம்பெறவுள்ளது. இதுவரையில் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிப்பு செய்யும் என்பதும் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts