தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முதல் எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த ரயில் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.