வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இராணுவ வீரரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் பூரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.