நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் முனைப்பிலேயே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தியில், இந்த அமைச்சரவை மாற்றமானது புதிய உத்வேகத்தை கொடுக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டவர்கள், நாட்டின் நன்மை கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்ற கடமைப்பட்டுள்ளார்கள் என மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஒன்பது அமைச்சுக்களிலும் ஒரு இராஜாங்க அமைச்சிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சுப் பொறுப்புக்களின் விபரம்
♦ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – மங்கள சமரவீர
♦ வெளிவிவகார அமைச்சர் – ரவி கருணாநாயக்க
♦ பெற்றோலிய வளத்துறை அமைச்சர் – அர்ஜூன ரணதுங்க
♦ துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் – மஹிந்த சமரசிங்க
♦ சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர் – எஸ்.பி.திஸாநாயக்க
♦ காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சர் – கயந்த கருணாதிலக்க
♦ தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் – டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன
♦ திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் – சந்திம வீரக்கொடி
♦ அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சர் – திலக் மாரப்பண
♦ மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – மஹிந்த அமரவீர