மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல் : 22ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts