முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில், இராணுவ வெற்றியின் 8 ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு நாளை (20) மாலை 3.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“பெற்ற வெற்றியைப் பாதுகாப்போம், இராணுவ வீரர்களை தனிமைப்படுத்தாதிருப்போம்” எனும் தொனிப் பொருளில் இந்த நிகழ்வை பல்வேறு அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.