முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!

கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும் தமிழ் சமூகத்தை கொந்தளிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்பாடானது மறக்க நினைக்கும் இனவாத செயற்பாடுகளை மீண்டும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts