வடக்கின் அபிவிருத்தி பணிகள் திருப்தியளித்துள்ளன என்கிறது அமெரிக்க காங்கிரஸ்

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட. மாகாணத்தில், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றகரமான முறையில் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts