காலி மாவட்டச்செயலக இணையத்தளம்மீது சைபர் தாக்குதல்!

காலி மாவட்டச் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிய சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது.

உலகெங்கிலும் கடந்த வாரம் 99 நாடுகளின் இணையத்தளங்கள்மீது ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், சிறிலங்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்விணையத்தளத்துக்குள் ஊடுருவிய இணைய ஊடுருவிகள், பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள் ஜிந்தாபாத், பாகிஸ்தானிய இராணுவம் ஜிந்தாபாத், பாகிஸ்டதான் ஐஎஸ்ஐ ஜிந்தாபாத், காஷ்மீர் விடுதலை, சிரிய விடுதலை, பலஸ்தீன விடுதலை என்று செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

சைபர் தாக்குதலுக்குள்ளான குறித்த இணையத்தளம் மீட்கப்பட்டாலும் அது தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts