அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்:
– Update Windows Patches – விண்டோஸ் பெச்சஸ்களை மேம்படுத்திக்கொள்ளவும்.
– Backup all documents to an external drive – கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் பிறிதொரு பிரத்யேக ஹாட்டிரைவில் பதிந்து சேமித்து கொள்ளவும்.
– அனாமதேய சந்தேகத்திற்கிடமான உள்ளீடுகளுடன் வரும் மின்னஞ்சல்கள் திறக்க வேண்டாம் எனவும், அவதானமாக அவற்றை அகற்றிவிட வேண்டும் எனவும் இணைய பயனாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.