இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990”அம்புயூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமையும் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்க அவர் உலகின் அதிசிறந்த பந்துவீச்சாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பில் கருந்து தெரிவித்திருந்தார்.
இதன் போது உரையாற்றிய மோடி , ‘உலகின் அதிசிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனை தந்ததும் இந்த மண்ணே’ என தெரிவித்திருந்தார்.