இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்றய தினம் (11) மாலை இலங்கைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இதன்போது கலந்து கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.