சுன்னாகத்தில் 17 இளைஞர்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விடுவிப்பு

ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த 17 இளைஞர்கள் பொலிஸாரால் சில மணி நேரம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அதிரடிப் படையினர் ஏழாழைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 17 பேரை பிடித்துச் சென்றனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்தமை, மதுபோதையில் சென்றமை, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இவர்களைக் கைது செய்ததாகப், பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்களை இரவு 10 மணியளவில் விடுவித்துள்ளனர்.

Related Posts