வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாக வட மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு!

வடமாகாண சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (09) வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார்.

இதனால் போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில், சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

Related Posts