ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு கறுவாத் தோட்டத்தில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சந்திம வீரகொடி, லசந்த அழகியவன்ன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.