Ad Widget

கீரி சுற்றுலா கடற்கரையை திறந்துவைத்தார் வடக்கு முதல்வர்

மன்னார் நகரசபை பிரிவிற்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

மன்னார் நகரசபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் நகரசபையின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர், மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் நகர சபையின் அலுவலர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

முதலமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், 3.51 மில்லியன் ரூபாய் செலவில் இச் சுற்றுலா கடற்கரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts