உரும்பிராய் பொதுச் சந்தையில் சுகாதாரமற்ற நிலை காணப்பட்டு வருவதனால் பொருட்களை நுகர்வதற்கு மக்கள் தயக்கம் காட்டிவருவதாக சந்தைக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தையில் இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதன் கழிவுகள் உரிய முறையில்அகற்றப்படாமையினால் சந்தையில் ஒரு பகுதியில் ஏராளமான புழுக்கள் நிறைந்து பார்ப்பதற்கு அருவருக்கத்த வகையில் துர்நாற்றம் வீசிக் காணப்படுகின்றது.
மேலும் பல இறைச்சிக் கழிவுகள் குப்பைக்குளிட்டு தீயிடப்பட்ட நிலையில் அது முழுமையான எரியாத நிலையில் கட்டாக்காலி நாய்கள் அதனை இழுத்து சென்றும் பல இடங்களில் விடப்பட்டு உள்ளது.
கழிவுகளில் கொட்டப்படும் இடத்துக்கு அண்மையாகவே மீன் விற்பனை நிலையம் மற்றும் இறைச்சி கடைகள் காணப்படுகின்றமையால் அங்கு நுகரப்படும் உணப்பொருட்கள் சுகாதாரமற்ற தன்மை காணப்படும் நிலையும் தோன்றியுள்ளது.
சந்தைப்பகுதியில்நுகர்வேர் ஒருவர் தெரிவிக்கையில்,
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலமுறை சுட்டிக்காட்டியும் முறையான விதத்தில் கழிவுகள் அகற்றப்படுவதில்லை எனவும் இச்சந்தையில் காணப்படும் மலசலகூடம் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் குறித்த மலசலகூடத்தினும் மதுஅருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் சந்தை சுற்றாடலில் வெற்று தகர ரீன்கள் என்பன காணப்படுவதனால் மழை காலங்களில் நீர் தேங்கி நுளம்புப் பெருக்கத்துக்கும் அது வழிக்கும் நிலையும் காணப்படுகின்றது.
எனவே உரிய தரப்பினர் குறித்த சுகாதாரப் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி உடனடியாக கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் நுகர்வோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.