கூட்டு எதிர்க்கட்சியினரின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடலில திங்கட்கிழமை இடம்பெற்ற மேதின கூட்டத்தில் பங்கேற்ற இருவரே அதிக வெப்பம் காரணமாக மரணமடைந்துள்ளதாக கொழும்பு தேசியவைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கடும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளதுடன் பல நோய்களும் பரவிவருவதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அண்மையில் சுகாதாரத்திணைக்களம் அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.