நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.