பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுபோதே, அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.