எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்காவிட்டால் இவ்விடத்திலேயே செத்துவிடுவோம்

“இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் காணாமல் போன எனது 17 வயதான பெண்பிள்ளை குறித்த தகவல்கள் எதுவுமே தெரியாது. இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததைக் கண்டதாக எமது உறவினர்கள் கூறினார்கள். எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்கவேண்டும், இல்லையெனில் இவ்விடத்திலேயே செத்து விடுவோம்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவான தாயொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 63ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர் கூறுகையில், “எனது பிள்ளை உயிருடன் இருந்தால் போதும். எல்லா இடத்திலும் நாங்களும் தேடிப்பார்த்து விட்டோம். எங்களுக்கு எங்கள் பிள்ளைகளே சந்தோசம். வயதான எங்களைப் பராமரிப்பதற்கு எமக்கு யாருமே இல்லை. தயவுசெய்து பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள்” என கவலையுடன் இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts