இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
திருகோணமலை துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கியை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தல் உட்பட மூன்று கோரிக்கைகளை முன்னிருத்தி, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, இவர்கள் முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போராட்டத்தை அடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகன சாரதிகள் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விடயம் குறித்து அமைச்சர் சந்திம வீரக்கொடியிடம் வினவிய போது, இன்று காலை தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கூறியுள்ளார்.