இன்புளுவன்ஸா தொற்று: மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக, பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்த அறிவுறுத்தல் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார,

“இந்தத் தொற்று இருப்பவர்கள், அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்களை சந்தித்ததன் பின்னர், பொதுமக்கள் தமது கைகளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவ வேண்டும்.

கைகளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவாமல், மூக்கையோ, கண்களையோ அல்லது முகத்தையோ தொடக்கூடாது.

மேலும், மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளிலுக்குச் செல்வதை தவிர்ப்பதன் மூலம் இந்தத் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்” என தெரிவித்தார்.

Related Posts