மீதொட்டமுல்ல அனர்த்தம்; குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 50,000 ரூபா!

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீதொட்டமுல்ல உயர் அச்சுறுத்தல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கே மாதாந்தம் 50,000 ரூபா படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக சேதமடைந்த 98 வீடுகளுக்கு பதிலாக 98 புதிய வீடுகளை வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

Related Posts