விசாரியுங்கள் அறிந்துகொள்ளுங்கள் – அது உங்களது உரிமையாகும்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் கல்வி அமைச்சில் தகவல் அறியும் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்திற்கான இணையதளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து நேற்று (புதன்கிழமை) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
அனைத்து கல்விசார் நிறுவனங்களும் இந்நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி தொடர்பான எந்தவொரு தகவல்களையும் அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந் நிகழ்வில் அமைச்சர்களுடன், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள்¸ உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.