அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார்.
அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன.
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எதிர்வுகூறலை நிஜமாக்கும் வகையில், டொனால்ட் டிரம்ப் அண்மையில் சிரிய ஹொம்ஸ் நகரிலுள்ள விமானப் படைத்தளத்தின் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியா மீதான தாக்குதலே ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனாவை அதிக உயிர்களை பலிகொள்ளக் கூடிய உலகப் போர் ஒன்றுக்குள் தள்ளும் என ஹொராசியோ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அவர் தற்போது தூய பாத்திமா அன்னை காட்சியளித்த 100 ஆவது ஆண்டு காலத்தில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என எதிர்வுகூறியுள்ளார்.
அந்த வகையில் மூன்றாம் உலகப் போரானது எதிர்வரும் மே 13 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறும் எனவும் இதன்போது பாரிய பேரழிவு மற்றும் மரணங்கள் இடம்பெறும் எனவும் ஹொராசியா தெரிவித்துள்ளார்.