பாடசாலைகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள், புகைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் தனி சிகரெட்டை விற்பனை செய்வதற்கும் தடைவிதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
புகைத்தல் காரணமாக ஏற்படுகின்ற நோய்களுக்காக, அரசாங்கம் வருடாந்தம் 72 பில்லியன் ரூபாயைச் செலவழிக்கிறது.
புகைத்தல் மற்றும் மதுசாரம் ஆகியவற்றின் பயன்பாடுகள் காரணமாக, வருடத்துக்கு 25ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் எந்தவொரு புகைப்பொருள் நிறுவனத்தையும் பதிவு செய்வதற்கு, ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது