பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்கள் விபத்தில் படுகாயம்!

உந்துருளியொன்று வானுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். சுன்னாகம் சந்தியில் நேற்று பிற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் இருந்து குறித்த மூவரும் ஒரு உந்துருளியில் தலைக்கவசம் அணியாது பயணித்துள்ளனர்.

குறித்த மூவரையும் கண்ட காவல்துறையினர் வீதியில் மறித்துள்ள வேளையில், நிற்காது தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் மூவரையும் காவல்துறையினர் பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்த வேளையில், சுன்னாகம் சந்தியில் உள்ள சமிஞ்ஞை விளக்குப் போடப்பட்டிருந்த நிலையில், பாதையை கடக்க முற்பட்ட போது, எதிரே வந்த வானுடன் மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்வர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதனால், அவர் மட்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts