யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று (11) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக, தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவராஜா (வயது 58) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு, கடந்த 05ஆம் திகதி குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அங்கிருந்த வைத்தியர், முதற்கட்ட சிகிச்சையை வழங்கியுள்ளார்.

பின்னர் காய்ச்சல் அதிகரித்தமையையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக 08ஆம் திகதி, யாழ். போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (11) உயிரிழந்துள்ளார்.

குருதிக் கலன்கள் குறைவடைந்து, அதனால் ஏற்பட்ட கிருமித் தொற்றினாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக, சட்டவைத்திய அதிகாரி வழங்கிய உடற்கூற்றுப் பரிசோதனையில் கூறப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts