வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை உருவாக்கும் நோக்கில் இலவச சுகாதார சேவையிலுள்ள மனிதவளங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆயிரத்து 300 தாதிமாருக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
2013, 2014 காலப்பகுதியில் தாதிமாருக்கான வெற்றிடங்கள் கூடுதலாக காணப்பட்டதனாலேயே தாதிமாரின் இடமாற்றங்களுக்கு இடமளிக்கப்படவில்லை . எதிர்காலத்தில் தாதிமாரின் எண்ணிக்கையை 50 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அங்கு தெரிவிதார்.
சமகாலத்தில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான தாதிமார் வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தாதிமாருக்கு பட்டப்படிப்பை வழங்கும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் தாதிமார் பீடமொன்று அமைக்கப்படும். அதன் கட்டடத்திற்கான அடிக்கல், மே மாதம் நாட்டப்படும். 12 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.
2016 ஜனவரி முதலாம் திகதி முதல் தாதிமாரின் சம்பள கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த சம்பள நிலுவைகள் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிணங்க இந்த மாதத்திலிருந்து தாதிமாருக்கு கூடுதலான சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அங்கு தெரிவிதார்.