தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மேக் இன் இந்தியா தயாரிப்புகளுக்கு அங்கீகாரமும் சில சலுகைகளும் வழங்கி வருகிறது.
அதாவது இந்திய மனித உழைப்பையும், இந்திய தொழில்நுட்பத்தையும் கொண்டு மட்டும் உருவாகும் பொருட்களுக்கு மேக் இன் இந்தியா அந்தஸ்து வழங்கப்படும்.
தற்போது சூப்பர் ரஜினி நடிக்கும் 2.ஓ படம் மேக் இன் இந்தியா அந்தஸ்தை பெறுகிறது. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்தியாவிலேயே உலகத் தரத்தில் தயாராகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான், கொரியன், சீனம் என 7 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படபிடிப்பு முழுவதும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டுள்ளது. இதன் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பாகுபலி புகழ் ஸ்ரீநிவாஸ் மோகன் கையாண்டுள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்துள்ளார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், நீர்வ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹீரோயின் எமி ஜாக்சன் மட்டுமே வெளிநாட்டு பெண்.