இலங்கை அணி 6 விக்கட்டுகளால் வெற்றி

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 20 க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி, இலங்கை அணி 156 என்ற ஓட்ட இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 77 ஓட்டங்களை பெற்றார்.

அவரே போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts