யாழ்.வேலணை பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் பிரிவு கட்டடம் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன் வேலணை பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு கட்டடம் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஸ்ரீதரன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மேலதிக மாவட்ட செயலாளர் சு.தெய்வேந்திரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள் மற்றும் துறைசார் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.