Ad Widget

வடக்கில் 44 மாதிரிக் கிராமங்கள்!

வடக்கு மாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த கிராமங்களில் 2500 வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் இதற்கான 1267 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இது அமுல்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படும் எனவும் நாட்டில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் நலன் கருதி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts