இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரும் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் மும்மை அணி சுப்பர்ஜிகான்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதேவேளை இலங்கை அணியின் முக்கிய வீரர் லசித் மாலிங்க மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
மும்மை அணியின் முதல் போட்டி 6 ஆம் திகதி நடைபெற உள்ளநிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது இருபது20 போட்டியும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த மாலிங்க இம்முறை இலங்கை அணியிலா அல்லது மும்மை அணியிலா விளையாடுவார் என்பதில் பெரும் சந்தேக ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது தீர்மானத்தை மாலிங்க வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எல் போட்டியினை விட இலங்கை அணியின் வெற்றி தமக்கு முக்கியமானது என்றும், ஐ.பி.எல் போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் பங்குபெற்றுவது முக்கியமானதாகினும் தான் தேசிய அணியில் இடம்பெறுவதற்கு முன்னுரிமை வழங்குவதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
எனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது போட்டித் தொடரில் பங்கேற்பேன் என மாலிங்க தெரிவித்துள்ளார்.